Friday, May 1, 2026

நான் உணர்ந்து கொண்டது

நான் உணர்ந்து கொண்டது அதாவது மரணமிலாப்பெருவாழ்வுக்கும் – முத்தேக சித்திக்கும் எத்தனை பிறவிகள் ஆகும்னு கணக்கு போட்டு பார்த்தால் – அது முடிகிற மாதிரி தெரியவில்லை ஆனால் சமீபகாலமாக எனக்கு வரும் தோன்றும் எண்ணம் : யார் ஒருவர் தொடர் சாதனம் பயிற்சி செய்து வருகிறாரோ - ஏதோ ஒரு பயிற்சி அல்ல –சரியான சன்மார்க்க கண் கொண்டு செய்யும் பயிற்சி – அதுவும் நாள் தோறும் சுமார் 10 – 12 மணி நேரம் செய்து வந்தால் – அனுபவம் தினம் சித்தித்து மேலேற வாய்ப்பு பிரகாசம் ஆகும் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என இல்லாமல் – தவ வாழ்க்கை ஒன்றை மட்டுமே – சாகாக்கல்வி ஒன்றே இலக்கு லட்சியம் என வாழ்ந்து வந்தால் - சாதனம் பயின்று வந்தால் , வள்ளல் பெருமான் உரைக்கும் எல்லா நிலை சாத்தியமே – ஆனால் ஒரு பிறவியில் முடியுமா என என்னால் அறுதியிட்டு கூற முடியாது ஆனால் அந்த நிலைக்கு மிக மிக அருகே சென்று விட முடியும் என்பது மட்டும் திண்ணம் ஆதலால் 20 வயதில் ஆரம்பித்தால் சுமார் 40 ஆண்டுகள் பிடிக்கலாம் எல்லாம் முடிக்க –அப்போது 60 ஆகும் – இது திருமணமாகாதவர்க்கு மட்டும் பொருந்தும் மற்றவர்க்கு வேறுபடும் – வேலை குடும்பம் என தடைகள் ஏராளம் ஏராளம் அதனால் வேலை திருமணம் எல்லாம் இல்லாமல் இருந்தால் நலம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.