Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, May 1, 2026
இதுவும் அதுவும் ஒன்று தான்
இதுவும் அதுவும் ஒன்று தான்
மக்கள் எப்படி ?? அவர் ரசனை ??
1 உண்மை சம்பவம்
ஒரு சமயம் மோனா லிசா படம் ஒரு அருங்காட்சியில் வைக்கப்பட்டது
அப்போது அதைக்காண கூட்டம் அவ்வளவாக வரவில்லை
அது எடுத்தபின்
மக்கள் அலைமோதினர் - ஏதோ இருக்கு என
வெற்று இடம் சுவர் பார்த்து போயினர்
ஆஹா மக்கள் ரசனை எப்படி ??
இவர் தான் மக்கள்
அது போலத்தான்
நல்ல படைப்புகளுக்கு பதிவுகளுக்கு இருக்கும் மரியாதை
அதை யாரும் படிக்கவும் மாட்டார்கள் விரும்பவும் மாட்டார்
அதிகபட்சம் 10 பேர் படிப்பார்கள் – அவ்ளோ தான்
அதே ஒரு உபயோகமில்லா புகைப்படம் போட்டால்
நூற்றுக்கணக்கில் பார்க்கப்பட்டு விரும்பப்படும்
இதுவும் அதுவும் ஒன்றே தான்
2 இதுவும் உண்மை சம்பவம் தான்
நான் ஒரு சமயம் முக நூலில் சத்திய ஞான சபையின் படம் போட்டேன்
அவ்ளோ தான்
விருப்பம் தெரிவித்தவர்கள் அதிகம் பேர்
கமெண்டுகள் எப்படி எனில் ??
ஆஹா அற்புதம் ஐயா
அருள் அடைந்துவிட்டீர்கள் ஐயா
வள்ளல் பெருமான் அருள் சித்தி ஆகிவிட்டது
எப்படி ?? நம் மக்கள்
இதைவிட நல்ல பதிவுகள் போட்டுள்ளேன்
அப்போதெல்லாம் பார்க்காத – விரும்பாத மக்கள் – இதுக்கு எப்படி இவ்வளவு விருப்பம் தெரிவித்தது வியப்பு விந்தை தான்
இது தான் மக்கள்
இவரை புரிந்து கொள்ளவே முடியாது
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.