Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, May 6, 2026
பிரமதண்டிகா யோகம்
பிரமதண்டிகா யோகம்
இந்த யோகத்தை வள்ளல் பெருமான் பயின்றுள்ளார் என்றால் எல்லா சன்மார்க்கத்தாரும் என்னை கேலி செய்வார்
அவர் வெறும் சோறு போட்டுத்தான் எல்லா சித்தியும் பெற்றார் என்பது அவர் வாதம்
பிரமதண்டிகா யோகம் இரும்புத் தீச்சட்டிகளுக்கு இடையே அமர்ந்து செய்யப்படும் யோகமாகும்.
சித்தி வளாகத் திருமாளிகை அறையில் பெருமானார் சிவானந்த நித்திரையில் நிலைத்து பிரமதண்டிகா யோகத்தில் இருக்கும் சமயம் அவரது பொன்மேனிக்கு இருமருங்கும் பெரிய
இரும்புத் தகளியில் நிலக்கரி அனல் மிளிர அதற்கிடையில் ஒரு ஆசனத்தில் அமர்ந்து இருப்பது வழக்கம்.
இது சுத்த தேகத்தின் ஆற்றல் வலிமை சோதிக்க வந்த டெஸ்ட் /TEST தான் இந்த யோகம் – இந்த சூட்டை தாங்கினால் தான் சுத்த தேகம் அடைவு பூர்த்தி ஆனதாக அர்த்தம் என கூறுவர் சிலர்
இந்த வெப்பத்தை அவர் உடல் தாங்கி நிற்குமாம்
உண்மை சம்பவம்
ஒரு நாள் குருக்கள் திடீரென பெருமானது அறைக்குள் நுழைய அவரது கால்பட்டு இரும்புத் தகளியில் இருந்த நெருப்பு சிதறி பெருமான்மீதும் குருக்கள்மீதும் விழுந்தது. இதைக் கண்ட குருக்கள் நெருப்பினை அகற்ற முயல அவர் கை சூடுபட்டு வருந்தினார். ஆனால், பெருமான்மீது சிதறிய நெருப்பால் அவருக்கோ, அவரது ஆடைக்கோ எந்த சேதமும் இல்லை. பெருமான் குருக்களைப் பார்த்து “உமக்கேன் பதைப்பு. நம்மை அது பாதிக்காது” என்று கூறி அவரது கையில்பட்ட சூட்டின் தழும்பை நீக்கி அருளினார்.
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.