Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, May 1, 2026
உலக வழக்கும் உண்மையும்
உலக வழக்கும் உண்மையும்
ஞானியர் நம் முன்னோர் கூற்று :
1 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
2 எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாது
வேறொன்றறியேன் பராபரமே
3 எல்லாரும் நலமுடன் வாழ வேணும்
இப்படி “ எல்லாரும் “ என ஏன் வேண்ட வேணும் ??
அதில் தான் சூக்குமம் இருக்கு என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்
நாம் ஒருவரை ஒருவர் சார்ந்து உள்ளோம் என்பது உண்மை
நாம் மட்டும் நலமுடன் இருக்க வேணும் என நினைப்பது மடத்தனம்
அது நடக்காது
ஏனெனில் ?
1 அமேசான் காடுகள் தான் உலகத்தின் நுரையீரல் – அங்கு காடுகள் இருந்தால் தான் உலகத்தின் 20 % பிராண வாயு தடையின்றி கிடைக்கும்
2 இப்போது ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் நம் மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்தால் தான் அவர் நாட்டில் மழைப்பொழிவு நடப்பதாக கண்டுபிடித்து , அங்கு காடுகள் வளர்ப்பு பராமரிப்புக்கு நிதி உதவி அளித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன
3 உலகில் ஒவ்வொரு உயிர்க்கும் ஒரு ரோல் இயற்கை அளித்துள்ளது – அது நடந்தால் தான் உலகில் எல்லா உயிரினமும் நன்கு வாழ முடியும் என ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளார் – இதில் மனிதரும் அடக்கம்
BGVenkatesh
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.