Sunday, May 3, 2026

காக புஜண்டர் ஞானம் 80 – 70

காக புஜண்டர் ஞானம் 80 – 70 ஆகுவா ளந்திசந்தி யுச்சி யென்றால் அப்பனே ரவிமதியுஞ் சுடர்மூன் றாகும் ஏகுவாய் மூன்றுமொன்றாய்ப் பின்ன லாகி இருந்திடமே பிரமாண்ட நிலைய தாகும்; போகுமே நீ செய்த காமமெல் லாம் புவனைதிரி சூலிகையுடைக் கிருபை யாலே; வாகுமே வளியோடே சேர்த்தா யானால் வாணியுந்தான் நாவில்நடஞ் செய்வாள் பாரே. 70 பொருள் : உண்மை தவம் எப்படி ஆற்றுவது என உரைக்கின்றார் சித்தர் அந்திசந்தியுச்சி = சோமசூரியாக்கினி சேர்ந்த முச்சுடர் ஆம் இம்மூன்றும் சேர்ந்த நிலை பிரமாண்ட நிலை ஆகும் இம்மூன்றும் சேர்ந்துவிட்டால் ஆசை எல்லாம் பறந்து போகும் அன்னை அருளாலே வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.