Wednesday, May 6, 2026

காக புஜண்டர் ஞானம் 80 – 50

காக புஜண்டர் ஞானம் 80 – 50 காகமென்ற ரூபமா யிருந்து கொண்டு காரணங்கள் அத்தனையும் கருவாய்ப் பார்த்து வேகமுடன் வெளியோட்ட நிலையாய்ப் பார்க்க வெகுதூரம் சுற்றியின்னம் விவரங் காணேன்; மோகமுடன் பரந்தமனம் அணுவ தாக்கி மூர்க்கமுடன் பரவெளியை மனவெளி தாக்க நாகரீக மாகவுந்தா னண்ட மேவி நடுவணைய முச்சிநடு மத்தி தானே. 50 பொருள் : தன் நிலை அனுபவம் உரைக்கிறார் சித்தர் தான் காக ரூபத்தில் இருந்து எல்லாவற்றையும் காரணங்கள் கண்டேன் தன் பரந்து விரியும் மனதை அணுவளவாக சுருக்கி அதை பரவெளியில் அடக்கி – அண்ட உச்சியில் நடு மத்தியில் வைத்து கருத்தொத்து இருந்தேன் எங்கிறார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.