Wednesday, May 6, 2026

காக புஜண்டர் ஞானம் 80 – 31

காக புஜண்டர் ஞானம் 80 – 31 உண்கலாம் பிரமத்தி லடங்கும் போதே உறுதியுள்ள அண்டத்தி லுருகிப் பாயுந் திங்கலாந் தோணுமடா அமர்தச் சீனி தித்திப்புப் பாலுடனே திடமாய் மைந்தா! தங்கலாந் தேகமது அறியா மற்றான் சட்டையுமே கழன்றுமிகத் தங்கம் போலே பொங்கலாம் மெய்ஞ்ஞானத் தீபத் தாலே பூரித்துப் பார்த்திடவே புவன மொன்றே. பொருள் : அமுதம் உண்ணுவதினால் உண்டாகும் அனுபவம் கூறுகிறார் சித்தர் சுழுமுனையில் அடங்கும் போது அமுதம் உண்ணலாம் அது உச்சியிலிருந்து பாயும் அது உண்பதால் உடல் சட்டை கழன்று சொக்கத்தங்கம் போல் உடல் ஜொலிக்கும் மினுமினுக்கும் மெய்ஞ்ஞான தீபம் ஆகிய ஆன்ம ஒளி பார்த்திடவே – அந்த அனுபவத்தால் எல்லாம் ஒன்றாகக்காணும் ஒருமை ஓங்கும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.